கீர்த்தியின் இரண்டாவது ரவுண்ட்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம் "ரவுடி ஜனார்த்தனா'.’இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 1980 காலகட்ட கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவில் கையில் அரிவாளுடன் ரத்தம் தெறித்த உடலுடன் வெளியாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் தோற்றம் மிரட்டலாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் தெலுங்கில் 2வது ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையோடு உள்ளாராம் கீர்த்தி.

Advertisment

பிரம்மாண்ட வாரிசு!

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நாயகியாக வலம்வரும் நிலையில், மகன் அர்ஜித்தும் நாயகனாக உருவாக முயற்சி எடுத்தார். இதற்காக பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த அவர், அப்பாபோல் பிரம்மாண்டமான கதையையே எதிர்பார்த்தாராம். அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஷங்கரின் சிஷ்யர் அட்லீயியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக்குமார், ஷங்கர் மகனுக்கு கதை சொல்லி சம்மதம் பெற்றுள்ளார். இதில் நாயகியாக தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகரான அனுராக் கஷ்யப் நடிக்கிறார். 

Advertisment

புராண மோகம்!

புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து நிறைய படங்கள் வந்திருந்தாலும் அதன் மீதுள்ள மோகம் தமிழ் இயக்குநர்களை தவிர்த்து மற்ற மொழி இயக்குநர்களுக்கு தற்போது அதிகமாகவே இருக்கிறது. அதனால் பெரும் லாபத்தை குறிவைத்து அது போன்ற படங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தெலுங்கு இயக்குநர் திரிவிக் ரம் ஸ்ரீநிவாஸ், அல்லு அர்ஜுனுடன் இணைந்து முருகனை அடிப்படையாக வைத்து ஒரு புராண படத்தை தொடங்க, திடீரென நின்றது. பின்பு அந்தக் கதை ஜூனியர் என்.டி. ஆரிடம் சென்று, சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகாமல் இருக்க, தற்போது மீண்டும் அல்லு அர்ஜுனிடமே திரும்பியுள்ளது.  இப்படத்தை திரி விக்ரமை வைத்து அதிக படங்களை தயாரித்த ஹாரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

tt1

டபுள் ஷாட்!

"சிக்மா'’படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், படத்தின் இறுதி கட்டப் பணிகளில் பிஸியாக இருக் கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தயாரிப்பு நிறுவனமான லைகா அவருக்கு ஒரு சர்ப்ரைஸை கொடுத்துள்ளது. முழுப் படத்தையும் பார்த்தவர்கள் ஜேசன் சஞ்சய்யின் மேக்கிங்கை பார்த்து அவர்மீது  நம்பிக்கையை வைத்துள்ளனர். இதனால் வசூல் எகிறும் என கணித்துள்ளவர்கள், அவரது இரண்டாவது படத்தையும் தாங்களே தயாரிப்பதாக கூறி ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். இதனால் ஜேசன் சஞ்சய்யின் அடுத்த படமும் லைகா தயாரிப்பில் உருவாவது உறுதியாகியுள்ளது. 

Advertisment

கவர்ச்சிக்கு நோ!

நடிப்பை விட்டுவிட்டு அரசியலில் ஆர்வம் காட்டிவரும் நடிகை நமீதா தற்போது மீண்டும் நடிக்க ஆசைப்படுவ தாகத் தெரிவித்துள்ளார். இதனால் சில இயக்குநர்கள் அவரை அணுக, அதே வேகத்துடன் அதிர்ச்சியோடு திரும்புறார் களாம். நமீதாவின் ஸ்ட்ரிக்ட்டான சில கண்டிஷன்ஸ்தான்  அதற்குக் காரணமாம். அதாவது முன்புபோல் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் எனவும், அழுத்தமான மற்றும் நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பேன் எனவும்  கறாராகச் சொல்கிறாராம். இந்த கண்டிஷனோடு தற்போது ஒரு படம் கமிட்டாகியுள்ளாராம். இந்தப் படத்தில் செல்வராகவனும் நடிக்கிறார். இப்படம் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறாராம் நமீதா.

-கவிதாசன் ஜெ.